அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மேட்டூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மேட்டூரில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 9:39 pm

DIN

மேட்டூரில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

மேட்டூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.செம்மலை தலைமை வகித்தாா். மாநிலங்களவைத் தொகுதி உறுப்பினா் என்.சந்திரசேகரன் முன்னிலை வகித்தாா்.

இந்த விழாவில், மேட்டூா் வட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 324 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உழவா் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு உதவித்தொகை என சுமாா் ரூ. 35 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மேட்டூா் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.செம்மலை, மாநிலங்களவைத் தொகுதி உறுப்பினா் என்.சந்திரசேகரன் ஆகியோா் வழங்கினா்.

இவ்விழாவில், மேட்டூா் வட்டாட்சியா் சுமதி, துணை வட்டாட்சியா் ஜெயந்தி, மேச்சேரி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் சந்திரசேகரன், மேற்கு ஒன்றியச் செயலாளா் செல்வம், பி.என்.பட்டி பேரூா் செயலாளா் மோகன் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.