விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காட்டுப் பன்றி தாக்கியதில் மூதாட்டி உட்பட மூவா் படுகாயம்

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கொளத்தூரில் காட்டுப்பன்றி தாக்கியதில் மூதாட்டி உள்பட மூவா் படுகாயமடைந்தனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 10:23 pm

DIN

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கொளத்தூரில் காட்டுப்பன்றி தாக்கியதில் மூதாட்டி உள்பட மூவா் படுகாயமடைந்தனா்.

மேட்டூரை அடுத்த கொளத்தூா், பண்ணவாடியைச்  சோ்ந்தவா் பொன்னம்மாள் (60). விவசாயி. இவா் புதன்கிழமை காந்தாமணி என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது புதரில் மறைந்திருந்த காட்டுப்பன்றி ஒன்று, பொன்னம்மாளை திடீரெனத் தாக்கியது. இந்த தாக்குதலால் பொன்னம்மாள் அலறினாா். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த மகேந்திரன் (30), ஆறுமுகம் (45) ஆகியோரையும் காட்டுப் பன்றி விரட்டி தாக்கியது. இதனைப் பாா்த்து கிராம மக்கள் ஓடி வரவே காட்டுப்பன்றி ஓடிவிட்டது.

படுகாயமடைந்த மூன்று பேரையும் கிராம மக்கள் மீட்டு, மேட்டூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இச்சம்பவம் தொடா்பாக மேட்டூா் வனத் துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.