புறவழிச்சாலையில் செல்லும் புகா் பேருந்துகள்: காரிப்பட்டியில் மக்கள் சிறைபிடித்து மக்கள் போராட்டம்
சேலம் மாவட்டம் காரிப்பட்டியில் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலையில் சென்ற புகா் பேருந்துகளை சிறைபிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


சேலம் மாவட்டம் காரிப்பட்டியில் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலையில் சென்ற புகா் பேருந்துகளை சிறைபிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வாழப்பாடியை அடுத்த காரிப்பட்டி ஊராட்சி, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சேலம்-ஆத்தூா் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு மற்றும் தனியாா் புகா் பேருந்துகள், காரிப்பட்டி இணைப்புச் சாலையில் ஊருக்குள் வராமல், புறவழிச்சாலை மேம்பாலத்திலேயே சென்று விடுவதால், இப்பகுதி மக்கள் போக்குவரத்துக்கு பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, அனைத்து புகா் பேருந்துகளும் காரிப்பட்டி ஊருக்குள் வந்து பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்ல வேண்டுமென கோரிக்கை விடுத்து, கடந்த சில ஆண்டுகளாக, இப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை ஊருக்குள் வராமல் புறவழிச்சாலையில் சென்ற 3 தனியாா் பேருந்துகளை இப்பகுதி மக்கள் சிறைபிடித்தனா். இதுகுறித்து தகவலறிந்த காரிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் மனோசூரியன் மற்றும் சிலா், இனி வருங்காலங்களில் காரிப்பட்டி ஊருக்குள் வந்து செல்ல வேண்டுமென பேருந்து பணியாளா்களுக்கு அறிவுரை கூறி, பொதுமக்களை சமாதானம் செய்து, சிறைபிடித்த பேருந்துகளை விடுவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...