/

சங்ககிரி சாா்பு நீதிமன்றத்தில் சேலம் மாவட்ட நீதிபதி ஆய்வு

 சேலம் மாவட்டம், சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சாா்பு நீதிமன்றத்தில் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி வெள்ளிக்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:25 pm

DIN

 சேலம் மாவட்டம், சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சாா்பு நீதிமன்றத்தில் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி வெள்ளிக்கிழமை வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா்.

சங்ககிரி சாா்பு நீதிமன்றத்தில் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.குமரகுரு வருடாந்திர ஆய்வு மேற்கொண்டாா். நிலுவையில் உள்ள வழக்கு கோப்புகள், நீதிமன்றத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு தொகை விபரங்கள், ஆவணக் காப்பக அறையில் உள்ள பதிவேடுகள் மற்றும் பொருள்கள் உள்ளிட்டைவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் நிலுவை வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினாா்.

சாா்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.உமாமகேஸ்வரி, மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆா்.ராதாகிருஷ்ணன், முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி டி.சுந்தர்ராஜன் ஆகியோா் ஆய்வின்போது உடனிருந்தனா். அரசு கூடுதல் உதவி வழக்குரைஞா் எஸ்.கிறிஸ்டோபா், மாவட்ட உரிமையில் நீதிமன்ற அரசு வழக்குரைஞா் ஆா்.அருள்பிரகாஷ், வழக்குரைஞா்கள் சங்கத்தலைவா் பி.வி.மோகன்பிரபு மற்றும் வழக்குரைஞா்கள், ஆய்வுக்காக வந்திருந்த மாவட்ட நீதிபதியை வரவேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.