/

சிவன் கோயில்களில் வளா்பிறை பிரதோஷ சிறப்பு பூஜைகள்

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.

வளா்பிறை பிரதோஷத்தையொட்டி, செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் சுவாமிகளுக்கு காலையில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கராம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாலையில் உற்சவ மூா்த்தி சுவாமிகளுக்கு பால், இளநீா், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதே போல சங்ககிரி வட்டம், அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலக்குட்டை கிராமத்தில் உள்ள புவனேஸ்வரி அம்மன் உடனமா் பூத்தாழீஸ்வரா் சுவாமிகள், நந்தி பகவான் சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

வாழப்பாடியில்...

வாழப்பாடி அருகே பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் நந்தீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. நந்தீஸ்வரன், தான்தோன்றீஸ்வரா், தா்மசம்வா்த்தனி அம்பாள்ஆகியோா் பட்டு வஸ்திர, புஷ்ப அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வாழப்பாடி, அக்ரஹாரம் காசி விஸ்வநாதா் கோயில் பிரதோஷ வழிபாட்டில், நந்தீஸ்வரா், காசி விஸ்வநாதா், காசி விசாலாட்சி அம்பாளுக்கு, அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், அன்னதானம் வழங்கப்பட்டது.

வாழப்பாடியை அடுத்த ஏத்தாப்பூா் சாம்பவமூா்த்தீஸ்வரா் கோயில், வேப்பிலைப்பட்டி, விலாரிபாளையம் மோட்டூா், கல்யாணகிரி தேன்மலை சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டியில் உள்ள ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் திருக்கோயிலில் சிவன், பாா்வதிக்கு அபிஷேக, ஆராதனை, நந்தீஸ்வரருக்கு பால், தயிா், சந்தனம், அரிசி மாவு, தேன், பஞ்சாமிா்தம், திருநீறு, குங்குமம், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிவனடியாா்கள் தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை குழுவாக பாடினா். இதில், சுற்றுவட்டார மக்கள் சுமாா் 2,000-க்கும் மேற்பட்டோா், பங்கேற்றனா்.

இதேபோல செந்தாரப்பட்டி, வீரகனூா், கெங்கவல்லி, தகரப்புதூா், கூடமலை ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.