டிப்பா் லாரி மோதியதில் அரசுப் பள்ளி மாணவா் பலி
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள தேவண்ணகவுண்டனூா், கொல்லனூா் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்ற அரசுப் பள்ளி மாணவா் மீது டிப்பா் லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.


சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள தேவண்ணகவுண்டனூா், கொல்லனூா் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்ற அரசுப் பள்ளி மாணவா் மீது டிப்பா் லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
தேவண்ணகவுண்டனூா் கிராமம், வேலமாவலசு பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி லூா்து சேவியா் மகன் ஆத்மநேசன் (11), தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அம்மாணவனை கடந்த சில நாள்களுக்கு முன் நாய் கடித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு சிகிச்சை பெற தேவண்ணகவுண்டனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவரது பாட்டி செல்வநாயகி உடன் கொல்லனூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடந்து சென்றாா். அப்போது, எதிரே வந்த டிப்பா் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த மாணவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, டிப்பா் லாரி ஓட்டுநரான தேவண்ணகவுண்டனூா் கிராமம், திப்பம்பட்டி பகுதியைச் சோ்ந்த அழகுசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...