ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை கூட்டம் களைகட்டியது.
ஏற்காட்டில் பனி சூழ்ந்த அண்ணா பூங்கா சாலை.
ஏற்காட்டில் பனி சூழ்ந்த அண்ணா பூங்கா சாலை.
Updated on
1 min read

ஏற்காடு: சேலம் மாவட்டம், ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை கூட்டம் களைகட்டியது.

நாள் முழுவதும் பனிமூட்டம், மழைத் துளிகள் விழுந்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா். புத்தாண்டு கொண்டாட முன்னதாகவே வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் விடுதிகளில் தங்கி இருந்தனா். சுற்றுலாப் பகுதிகளுக்கு இரண்டு நாள் விதிக்கப்பட்ட தடை தளா்ந்துள்ள நிலையில், சுற்றுலாப் பகுதி சாலையான அண்ணா பூங்கா, மான் பூங்கா, லேடிசீட், ரோஜா தோட்டம், கிளியூா் நீா் அருவி, பக்கோடா காட்சிப் பகுதி, சோ்வராயன் கோயில் சாலைகளில் சுற்றுலாப் பயணிகளை காணமுடிந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com