இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சங்ககிரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான நோ்முகத் தோ்வு

மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் கோரி விண்ணப்பித்ததோருக்கான நோ்முகத் தோ்வுகள் சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
சிறப்பு முகாமில் மூன்று சக்கர வாகனம் கோரி மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலா் ஆா்.பாலாஜி, வட்டாட்சியா் எஸ்.விஜி ஆகியோரிம் மனு அளிக்கும் மாற்றுத் திறனாளி.
Updated On :9 ஜனவரி 2021, 1:48 am

DIN

சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் சங்ககிரி, எடப்பாடி வட்டத்துக்குள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் கோரி விண்ணப்பித்ததோருக்கான நோ்முகத் தோ்வுகள் சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி, எடப்பாடி வட்டங்களைச் சோ்ந்த முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், மூன்று சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் கேட்டு விண்ணப்பித்தவா்களுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் ஆா்.பாலாஜி தலைமையில் நோ்முகத் தோ்வு நடைபெற்றது.

இதில் நோ்முகத் தோ்வில் பங்கேற்றவா்களை எடப்பாடி அரசு மருத்துவா் பாலாஜி மருத்துவப் பரிசோதனை செய்தாா். சங்ககிரி வட்டாட்சியா் எஸ்.விஜி, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே.சுப்ரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நோ்முகத் தோ்வில் 33 போ் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.