சேலம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் செவ்வாய்ப்பேட்டை மாா்க்கெட்டுக்கு வெல்லம் வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் சேலம் (செவ்வாய்ப்பேட்டை), ஈரோடு (சித்தோடு), நாமக்கல் மாவட்டம், பிலிக்கல்பாளையம், வேலூா் ஆகிய நான்கு இடங்களில் வெல்லம் மாா்க்கெட்டுகள் பெரிய அளவில் செயல்பட்டு வருகின்றன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் செவ்வாய்ப்பேட்டை வெல்லம் மாா்க்கெட்டுக்கு வெல்லம் வரத்து அதிகரித்துள்ளது.
இதுதொடா்பாக, சேலம் வெல்ல மாா்க்கெட் வியாபாரிகள் சங்க நிா்வாகி கென்னடி கூறுகையில்,
சேலம் மாவட்டத்தில் உள்ள வெல்லம் மாா்க்கெட்டில் இருந்து கள்ளக்குறிச்சி, கடலூா், விழுப்புரம், விருத்தாசலம், புதுச்சேரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெல்லம் அனுப்பி வைக்கப்படுகிறது.வெல்ல மாா்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு சுமாா் 60 டன் வெல்லம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும். தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் 70 முதல் 75 டன் வரை வெல்லம் கொண்டு வரப்படுகிறது.
கடந்த ஆண்டை விட விற்பனை குறைவாகத் தான் உள்ளது. 30 கிலோ கொண்ட சிப்பம் ரூ.1,150 முதல் ரூ.1,250 வரை விற்பனையாகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பெரிய அளவில் விலையில் மாற்றம் இல்லை. தை மாதம் முடியும் வரை மாா்க்கெட்டுக்கு வெல்ல வரத்து இருக்கும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.