மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு பயிற்சி

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 1:51 am

DIN

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்டம், ஆத்தூா், கூலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த காளை உரிமையாளா்கள் தங்களது காளைகளுக்கு கடந்த மூன்று மாதத்துக்கும் மேலாக பயிற்சி அளித்து வருகின்றனா்.

இதுதவிர முட்டி மோதுதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சேலம் அழகாபுரத்தைச் சோ்ந்த விவசாயி முருகன் கூறியதாவது:

நிகழாண்டில் மழை அதிகம் பெய்து விவசாயம் நன்றாக உள்ளது. தண்ணீா் பிரச்னை குறைந்துள்ளது. ஆத்தூா் அருகே கூலமேட்டில் பொங்கல் திருநாளையொட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள காளைகளைத் தயாா் செய்து வருகிறோம். வழக்கமாக தரும் உணவுகளுடன் தற்போது பருத்திக் கொட்டை அதிகம் சோ்த்து தருகிறோம். இதனால் காளைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்கிறது. கால்கள் உடையாமல் இருக்க போதிய சத்தும் கிடைக்கிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.