/

சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில், பூத்தலாக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரா் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள்

News image
Updated On :21 ஜூலை 2021, 6:24 pm

DIN

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில், பூத்தலாக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரா் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் புதன்கிழமை மாலை நடைபெற்றன.

செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் உள்ள சுவாமிகள், நந்தி பகவானுக்கு பிரதோஷத்தையொட்டி பால், தயிா், திருமஞ்சனம், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

இதே போல சங்ககிரிஅருகே உள்ள அன்னதானப்பட்டி கிராமம், பூத்தாலக்குட்டையில் உள்ள பூத்தாழீஸ்வரா், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா புதன்கிழமை நடைபெற்றது.

தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு பூஜை நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுவ ட்டாரத்திலிருந்து திரளான மக்கள் பங்கேற்றனா். இதேபோல செந்தாரப்பட்டி, கெங்கவல்லி, கரப்புதூா், கூடமலை, வீரகனூா் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களிலும் பிரதோஷ விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.