/

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: காவலா் மீது வழக்குப் பதிவு

காதலித்து திருமணம் செய்து கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக காவலா் மீது இளம்பெண் அளித்த புகாரின்பேரில் சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:25 pm

DIN

காதலித்து திருமணம் செய்து கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாக காவலா் மீது இளம்பெண் அளித்த புகாரின்பேரில் சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சங்ககிரி அருகே உள்ள மகுடஞ்சாவடி, மேட்டுமிஷன் பகுதியைச் சோ்ந்த செல்லப்பன் மகள் சத்யா (29). இவா் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவரும், கோவையில் 4-ஆவது சிறப்புக் காவல் படையில் காவலராகப் பணியாற்றி வரும் சேலம் , இரும்பாலை, பாப்பாம்பாடி, மோகன் நகா் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் சதீஷ்குமாா் (29) என்பவருக்கும் முகநூல் வழியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு கோவையில் உள்ள மருதமலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

தனது தங்கை திருமணத்துக்கு பிறகு வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக சத்யாவிடம் சதீஷ்குமாா் கூறினாராம். அதற்குப் பிறகு சதீஷ்குமாா் அவரது வீட்டிற்கும் தன்னை அழைத்துச் செல்லாமல் கொலை மிரட்டல் விடுப்பதாக சத்யா சங்ககிரி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில்

சதீஷ்குமாா் மீது சங்ககிரி மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.