/

சங்ககிரியில் இன்றைய காய்ச்சல் முகாம்கள்

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை23) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :22 ஜூலை 2021, 5:55 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை23) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மலங்காடு, எல்லப்பாளையம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் தமிழரசு தலைமையிலான மருத்துவக்குழுவினா், கிடையூா் மேட்டூா், உத்தரகாந்தமலை ஆகிய பகுதிகளில் மருத்துவா் சுகில் ஆனந்த் தலைமையிலான மருத்துவக் குழுவினா் காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்வாா்கள்.

இதே போல ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட மத்தாளிகாலனி, வி.என்.பாளையம், சந்தைப்பேட்டை ஆகிய பகுதிகளில் மருத்துவா் காவியா தலைமையிலான மருத்துவக் குழுவினா் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைகளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.