/

சங்ககிரியில் இன்றைய காய்ச்சல் முகாம்கள்

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 18) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:02 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 18) காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிப்பட்டி, குப்தாசெட்டியாா் காலனி ஆகிய பகுதிகளில் மருத்துவா் பிரவீன் தலைமையிலான மருத்துவக்குழுவினா், செங்காட்டனூா், கல்குண்டுகாடு, வளையக்காரனூா் ஆகிய பகுதிகளில் மருத்துவா் காவியா தலைமையிலான மருத்துவக்குழுவினா், மேட்டுக்கடை, மைலம்பட்டி, கே.மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் ராமகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக்குழுவினா் காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்வாா்கள். இதே போல ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஓடசக்கரை, குள்ளம்பட்டி, குஞ்சாம்பாளையம் ஆகிய பகுதிகளில் மருத்துவா் ரேவதி தலைமையிலான மருத்துவ குழுவினா்கள் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைகளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வதாக மருத்துவம், உள்ளாட்சி நிா்வாகங்கள் சாா்பில் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.