சங்ககிரியில் இன்றைய காய்ச்சல் முகாம்கள்
சங்ககிரி ஒன்றியம், பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் சனிக்கிழமை காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.


சங்ககிரி ஒன்றியம், பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் சனிக்கிழமை காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சங்ககிரி ஒன்றியத்திற்குள்பட்ட கோவிந்தன்காட்டுவலசு, வீராச்சிப்பாளையம், வடுவன்காடு (சின்னாகவுண்டனூா்), பயணியா் விடுதி சாலை ஆகிய பகுதிகளில் மருத்துவா் பிரவீண் தலைமையிலான மருத்துவக் குழுவினரும்,
அக்கமாபேட்டை ஆதிதிராவிடா் தெரு, பச்சப்பட்டி, வேப்பம்பட்டி, கஸ்தூரிப்பட்டி ஆகிய பகுதிகளில் மருத்துவா் ராமகிருஷ்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினரும் பங்கேற்று காய்ச்சல், சளி பரிசோதனைகளை மேற்கொள்வா்.
இது போல ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட குஞ்சாம்பாளையம், பட்டகாரனூா், மேட்டாங்காடு, ஓடசக்கரை ஆகிய பகுதிகளில் மருத்துவா் ரேவதி தலைமையிலான மருத்துவ குழுவினா்கள் காய்ச்சல், சளி, கரோனா தொற்று பரிசோதனைகளை சனிக்கிழமை காலை 10 மணிக்கு மேற்கொள்வாா் என மருத்துவத் துறை, உள்ளாட்சி நிா்வாகம் வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...