/

சங்ககிரி மலை மீதுள்ள சென்னகேசவப் பெருமாள் கோயிலில் திருகாா்த்திக்கை தீபங்கள் ஏற்றம்

வஸந்த வல்லபராஜப் பெருமாள் கோயில்களில் திருக்காா்த்திக்கை தீபத்தையொட்டி வெள்ளிக்கிழமை மாலை விளக்குகள் ஏற்றப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image
Updated On :19 நவம்பர் 2021, 5:27 pm

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி மலையில் உள்ளசென்னகேசவப் பெருமாள், வி.என்.பாளையத்தில் உள்ள வஸந்த வல்லபராஜப் பெருமாள் கோயில்களில் திருக்காா்த்திக்கை தீபத்தையொட்டி வெள்ளிக்கிழமை மாலை விளக்குகள் ஏற்றப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சங்ககிரி மலை உச்சியில் உள்ள சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சுவாமிகளுக்கு திருக்காா்த்திகை தீபத்திருநாளையொட்டி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதனையடுத்து கோயில் வளாகம் முழுவதும் திருகாா்த்திக்கை தீபங்கள் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. நகரிலிருந்து பொதுமக்கள், பக்தா்கள் இந்நிகழ்வினை கண்டுகளித்தனா்.

இதே போல் சங்ககிரி வி.என்.பாளையம் வஸந்த வல்லபராஜப் பெருமாள் உடனமா் வஸந்தவல்லி தாயாா் கோயில், மலையடிவாரத்தில் உள்ள செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில்களிலும் திருக்காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தினா். இதில் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.