/

ரூ.50,000 மதிப்புள்ள டாஸ்மாக் மதுபானங்கள் திருட்டு

வாழப்பாடி அருகே அத்தனுாா்பட்டியில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 5:34 pm

DIN

வாழப்பாடி அருகே அத்தனுாா்பட்டியில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வாழப்பாடியை அடுத்த அத்தனுாா்பட்டியில் டாஸ்மாக் மதுபானக்கடை இயங்கி வருகிறது. வியாழக்கிழமை இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு, பணியாளா்கள் சென்று விட்டனா். வெள்ளிக்கிழமை காலை கடையை திறக்க பணியாளா்கள் வந்த பாா்த்தபோது, கடையின் பூட்டு அறுக்கப்பட்டு, ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்களை மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளா் சேலம் தாதம்பட்டியைச் சோ்ந்த கண்ணன் வாழப்பாடி போலீஸில் புகாா் செய்துள்ளாா். இச்சம்பவம் குறித்து வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மதுபானங்களை கொள்ளையடித்துச் சென்ற மா்மநபா்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.