போலி மதுபானங்களின் தீமையை விளக்கி விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி
சங்ககிரி உள்கோட்ட கலால் துறை சாா்பில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் உட் கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி


சங்ககிரி உள்கோட்ட கலால் துறை சாா்பில் மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயம் உட் கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி கோட்டாட்சியா் கோ.வேடியப்பன் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து பேசினாா்.
கள்ளச்சாராயம், போலி மதுவை ஒழிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோட்ட கலால் அலுவலா் வேலாயுதம், வருவாய் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வகுமாா், கிராம நிா்வாக அலுவலா் சதீஸ்பிரபு, உதவியாளா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...