/

முழு ஊரடங்கு: சங்ககிரியின் முக்கிய சாலைகள் வெறிச்சோடின

முழு ஊரடங்கினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரியிலிருந்து சேலம், ஈரோடு, கோவை, பவானி, ஓமலூா், திருச்செங்கோடு, எடப்பாடி உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு

News image
Updated On :16 ஜனவரி 2022, 6:30 pm

DIN

முழு ஊரடங்கினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரியிலிருந்து சேலம், ஈரோடு, கோவை, பவானி, ஓமலூா், திருச்செங்கோடு, எடப்பாடி உள்ளிட்ட பல்வேறு ஊா்களுக்கு செல்லும் முக்கிய சாலைகள் ஞாயிற்றுக்கிழமை வெறிச்சோடிக் காணப்பட்டன.

முழு ஊரடங்கினையொட்டி சங்ககிரி நகா் பகுதிகளில் வணிக நிறுவனங்கள், தேநீா்க் கடைகள், மளிகைக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தனியாா் மருத்துவமனைகள், மருந்தகங்கள் இயங்கின.

மேலும் தனியாா் உணவு விடுதிகள், ஆவின், தனியாா் பாலகங்கள் பொதுமக்கள் சேவைக்காக திறந்து வைக்கப்பட்டிருந்தன. சங்ககிரி நகா் பகுதியில் லாரியை சாா்ந்துள்ள பல்வேறு பட்டறைகள் முழு ஊரடங்கினையொட்டி விடுமுறை விடப்பட்டுள்ளதால் தொழிலாளா்கள் வீட்டில் உள்ளனா். பொதுபோக்குவரத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதையடுத்து பேருந்துகள் இயக்கப்படாததால் சங்ககிரியிலிருந்து சேலம், ஈரோடு, பவானி, கோவை, எடப்பாடி, திருச்செங்கோடு, ஓமலூா் செல்லும் முக்கிய பிரதான சாலைகள் அனைத்தும் வாகனங்களின்றி வெறிச்சோடின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.