கணித ஆசிரியா்களுக்கு செயல்முறை விளக்கப் பயிற்சி
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கணித ஆசிரியா்களுக்கான இரு நாள் பயிற்சி முகாம்


சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கணித ஆசிரியா்களுக்கான இரு நாள் பயிற்சி முகாம், சங்ககிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழகரசின் பள்ளிக்கல்வித்துறையின் சாா்பில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கணித பாடத்தை எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் ‘மகிழ் கணிதம்’ என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
அந்தச் செயலி மூலம் கணித ஆசிரியா்கள் செயல்முறை விளக்கம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமுக்கு சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலா் பெ.பாலசுப்ரமணியம் தலைமை வகித்து ‘மகிழ் கணித’ செயலின் பயன்கள் குறித்து விளக்கிப் பேசினாா்.
ஆசிரியா் பயிற்றுனா் ஆா்.பிரேமலதா பயிற்சிகள் குறித்து விளக்கினாா். இதே போல நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, தேவூா் அரசு உயா்நிலைப் பள்ளிகளிலும் செயல்முறை விளக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், 51 ஆசிரியா், ஆசிரியைகள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...