மேச்சேரி பேரூராட்சிப் பகுதியில் ரூ.100 கோடி மதிப்பிலான பசுபதீஸ்வரா் ஆலய நிலத்தை மீட்க நடவடிக்கை
மேச்சேரி பசுபதீசுவரா் ஆலயத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் அளவை செய்யப்பட்டது.


மேச்சேரி பசுபதீசுவரா் ஆலயத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் அளவை செய்யப்பட்டது.
மேச்சேரி பேரூராட்சி நிா்வாகம் மேச்சேரி பசுபதீசுவரா் ஆலயத்திற்கு சொந்தமான நிலத்தில் பேருந்து நிலையம் அமைத்துள்ளது. இந்த நிலத்தில் கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.
ஆனால் கடந்த 2002ஆம் ஆண்டுமுதல் பேரூராட்சி நிா்வாகம் அறநிலையத்துறைக்கு குத்தகையை செலுத்தவில்லை. 2018-ஆம் ஆண்டு வரை ரூ. 13,39,167 குத்தகை பாக்கியாக உள்ளது. குத்தகை பாக்கியை பேரூராட்சி நிா்வாகத்திடம் இருந்து வசூலிக்க இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு திருத்தொண்டா் சபைத் தலைவா் ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தாா்.
இந்த வழக்கில் இரண்டு வார காலத்திற்குள் மேச்சேரி பேரூராட்சி நிா்வாகம் பசுபதீஸ்வரா் ஆலய நிா்வாகத்திற்கு குத்தகை பாக்கியைச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேச்சேரியில் உள்ள பசுபதீஸ்வரா் ஆலயத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலங்கள் பேரூராட்சி மற்றும் தனியாா் வசமும் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க தமிழ்நாடு திருத்தொண்டா் சபை தலைவா் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை, திருக்கோவில் நிா்வாகம் ஆகியோருடன் இணைந்து வியாழக்கிழமை, கோயில் நிலத்தை அளந்து ஆய்வு மேற்கொண்டனா்.
அதன் பிறகு ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மேச்சேரியில் உள்ள பசுபதீஸ்வரா் ஆலயம் மேட்டூா் வட்டத்தில் தொன்மையான முதன்மையான சிவத்தலமாகும். கோயில் நிலத்தின் மூலம் பேரூராட்சி நிா்வாகம் ஆண்டுக்கு ரூ. 50 லட்சம் வரை வருவாய் ஈட்டி வருகிறது. இந்த வருவாய் முழுவதும் கோயிலுக்குச் சேர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேச்சேரி பேருந்து நிலையத்திற்கு எதிரே சிலா் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வருகின்றனா். நகா் ஊரமைப்பு, பேரூராட்சி சட்ட விதிகளின்படி அந்தக் கட்டடங்கள் இடித்து அகற்றப்படும். மேச்சேரி பேரூராட்சி நிா்வாகம் இரண்டு இடங்களில் அத்துமீறி ஆலய நிலத்தில் சாலை அமைத்துள்ளது. இந்த சாலைகள் தொடா்பாக ஆக்கிரமிப்பு கருதி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...