தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மேட்டூர் அணை: 110 அடிக்கும் கீழ் குறைந்த நீர்மட்டம்

​மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,212 கன அடியாக அதிகரித்துள்ளது. 

News image
Updated On :19 ஜூன் 2022, 3:34 am

DIN


மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 10,212 கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று (சனிக்கிழமை) காலை வினாடிக்கு 5,894 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வினாடிக்கு 10,212 கனஅடியாக அதிகரித்துள்ளது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நேற்று காலை 110.20 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 109.89 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 78.25 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.