தவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

ஆத்தூர் அருகே பேய் ஓட்டும் விநோத திருவிழா: 100 பேய்களை ஓட்டிய பூசாரி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தேக்கல்பட்டி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் வழிபடக்கூடிய மத்தாள காளியம்மன் கோயில் வழிபாடு இன்றளவும் நடைபெற்று வருகிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 2:47 pm IST

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தேக்கல்பட்டி ஊராட்சியில் மலைவாழ் மக்கள் வழிபடக்கூடிய மத்தாள காளியம்மன் கோயில் வழிபாடு இன்றளவும் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மந்தாள காளியம்மன்  கோயில் தேக்கல் பட்டி ஊராட்சியில் முழுவதும் மலைப்பகுதிகள் சூழ்ந்த மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலில் வருடா வருடம் சிறப்பு வழிபாடு நடத்தி, பேய் ஓட்டும் நிகழ்வு நடந்து வருகின்றது. இந்த கோயில் மலைவாழ் மக்கள் மட்டுமே வழிபடக் கூடிய இந்த கோயிலுக்கு கெங்கவல்லி, அயோத்தியாபட்டணம், பச்சைமலை, கொல்லிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மக்கள் வந்து ஒன்றுகூடி பாரம்பரிய முறையில் சாமி சக்தி அழைத்து வந்து கோயிலில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.

திருமணமாகாத பெண்கள், வெள்ளை சேலை கட்டி தரையில் கவிழ்ந்து படுத்து கொள்வர். சேர்வை மாடு என்று அழைக்கப்படக்கூடிய சாமி, மாடுடன்  வரும் போது கோயிலை சுற்றி வெள்ளை சேலை அணிந்த பெண்கள் தரையில் தலைகுப்புற கவிழ்ந்து நூற்றுக்கணக்கான பெண்கள் படுக்கின்றனர். அதன் மீது மாடு தாண்டி வருகிறது. 

அப்போது பெண்களுக்கு பேய் இருந்தால் மாடு அந்த பெண்களை மிதித்து தண்டுவதாகவும், பேய் இல்லை என்றால் மாடு அந்த பெண்ணை தாண்டி விடுவதாகவும் கூறப்படுகிறது

இதில் 500க்கும் மேற்பட்ட மக்கள் திரளாக கலந்து கொண்டனர். அதில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை மாடு மிதித்ததால், அந்த பெண்களில் தலைமுடியை பிடித்து இழுத்து சாட்டையால் அடித்து இழுத்துசென்று அருகில் உள்ள மரத்தில் தலைமுடியை பிய்த்து ஆனி அடித்தனர். இதனால் அந்தப் பெண்ணை பிடித்திருந்த பேய் போய் விட்டதாக ஐதீகம்.  

அந்த பேய் ஓட்டும் வினோத காட்சிகளைக் கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். மேலும் பேய் ஓட்டுவது மட்டுமல்லாமல் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு அதன் மூலம் குழந்தை பாக்கியம் கிடைத்து வருகிறதாக அய்திகம் உள்ளதால் சுற்றுப்பகுதியில் உள்ள மலை கிராம மக்கள் குலதெய்வ வழிபாடாக பச்சமலை, தும்பல்பட்டி பைத்தூர், மேல் தொம்பை, கீழ் தும்பை, கீரிப்பட்டி, அயோத்தியபட்டணம், பருத்திக்காடு சுக்கம்பட்டி, மஞ்சவாடி கணவாய், மந்தக் காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் இங்கு வந்து  வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.