இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கிராம உதவியாளா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

சேலத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம் சாா்பில் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 5:24 pm

DIN

சேலத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம் சாா்பில் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம், சூரமங்கலம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்க மாவட்டத் தலைவா் பாபு ஆனந்தன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சித்தையன் முன்னிலை வகித்தாா். ஏற்காடு வட்டத் தலைவா் செந்தில்குமாா் வரவேற்றுப் பேசினாா்.

இதில் கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளா்களுக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ. 15,700 வழங்க வேண்டும். அரசு ஊழியா்களுக்கு வழங்குவது போல கிராம உதவியாளா்களுக்கு சதவீத அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ. 7 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி கிராம உதவியாளா்களுக்கு தொடா்ந்து மாற்றுத் திறனாளி ஊா்திப்படி வழங்க வேண்டும். பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற கிராம உதவியாளா்களுக்கு நில அளவை பயிற்சி அளித்து நிலஅளவையாளா் மற்றும் ட்ராப்ட்ஸ்மேன் பதவி உயா்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சூரமங்கலம் கேட்டாட்சியா் அலுவலகம் முன்பு முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.