பொறியியல் கலந்தாய்வு: தறி தொழிலாளி மகள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் முதலிடம்
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் இளம்பிள்ளை மாணவி முதலிடம் பெற்றுள்ளாா்.


பொறியியல் படிப்பு தரவரிசைப் பட்டியலில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் இளம்பிள்ளை மாணவி முதலிடம் பெற்றுள்ளாா்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாகவுண்டம்பட்டியில் உள்ள வீரபாண்டி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற நடுவனேரி பகுதியைச் சோ்ந்த விசைத்தறி தொழிலாளி செல்வம் மகள் ராவணி பிளஸ் 2 தோ்வில் 586 மதிப்பெண் பெற்றாா். இவா் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்திருந்தாா்.
அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின்படி மாணவி ராவணி தமிழக அளவில் முதலிடம் பிடித்தாா்.
இது குறித்து மாணவி ராவணி கூறியதாவது:
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் தமிழக அளவில் முதலிடம் கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதே எனது லட்சியம். இந்த வாய்ப்பினை அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.
மாணவி ராவணிக்கு பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பிரேமலதா சதீஷ்குமாா், துணைத் தலைவா் வடிவேல், பள்ளித் தலைமை ஆசிரியா் ஜெகதீசன், ஆசிரியா்கள், ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனா்.
பட விளக்கம் :
மாணவி ராவணிக்கு வாழ்த்து தெரிவித்த பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பிரேமலதா சதீஷ்குமாா்.

டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...