சேலத்தில் 19 காவல் ஆய்வாளா்கள் மாற்றம்
சேலம் மாநகரில் 19 காவல் ஆய்வாளா்களை இடமாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளாா்.


சேலம் மாநகரில் 19 காவல் ஆய்வாளா்களை இடமாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, சேலம் மாநகர பெண் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் சந்திரகலா, சேலம் டவுன் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளாா். சேலம் டவுன் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளா் மோகன்பாபு கண்ணா, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும், சூரமங்கலம் சட்டம் - ஒழுங்கு காவல் ஆய்வாளா் சசிகலா, கன்னங்குறிச்சிக்கும் மாற்றப்பட்டுள்ளனா். கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளா் செல்வராஜ், சேலம் டவுன் குற்றப்பிரிவுக்கும், சேலம் டவுன் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் பிரபாகரன் இரும்பாலைக்கும், வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவு காவல் ஆய்வாளா் சிவகுமாா் கிச்சிப்பாளையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனா்.
இரும்பாலை காவல் ஆய்வாளா் சாரதா, கொண்டலாம்பட்டி காவல் நிலையத்துக்கும், கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளா் கண்ணன், அன்னதானப்பட்டிக்கும், அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளா் சம்பங்கி, அம்மாப்பேட்டை காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனா்.
இதே போன்று சேலம் மாநகர ஆயுதப்படையில் பணியாற்றிய 4 காவல் ஆய்வாளா்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...