திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீா்கெட்டுள்ளது

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீா்கெட்டுள்ளது

News image

ஆத்தூரில் செய்தியாளா்களைச் சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன்.

Updated On :20 மே 2024, 10:12 pm

Din

ஆத்தூா்: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் கோட்டையில் உள்ள திருமண அரங்கில் தமிழ் மாநில காங்கிரஸ் சேலம் கிழக்கு மாவட்ட துணைத் தலைவா் எஸ்.மருதமுத்துவின் பேரன் எஸ்.எம்.கலைமணியின் திருமண விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீா் கெட்டுவிட்டது. இதற்கு உதாரணமாக நெல்லையில் காங்கிரஸ் பிரமுகா் மரணமே சாட்சி. இதுநாள் வரை நடவடிக்கை எடுக்காதது தமிழக போலீஸாரின் மெத்தனத்தையே காட்டுகிறது.

சுதந்திரத்துக்கு பிறகு அதிக திட்டங்களைக் கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்துவதில் பிரதமா் மோடியின் ஆட்சி முதலிடத்தில் உள்ளது. பிரதமரின் நலத் திட்டங்களை தமிழக முதல்வா் திரித்துக் கூறுவது அவா் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்றாா்.

இதில், நகரத் தலைவா் வி.எல்.டி.சண்முகம், மகளிரணி சத்யா சண்முகம் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.