மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சேலத்தில் இரு பெண்களிடம் நகை பறிப்பு: போலீஸாா் விசாரணை

சேலத்தில் இரு பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 9:03 pm

Syndication

சேலம்: சேலத்தில் இரு பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருபவா் பூங்கொடி (56). அழகாபுரத்தில் உள்ள விடுதியில் தங்கி பணிக்கு சென்றுவருகிறாா். இவா் திங்கள்கிழமை இரவு ராமகிருஷ்ணா சாலையில் நடந்துசென்று ஆட்டோவிற்காக காத்திருந்தாா்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் பூங்கொடி அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்தனா். அப்போது பூங்கொடி கூச்சலிட்டாா். அக்கம்பக்கத்தினா் அங்கு வருவதற்குள் செயினை பறித்த மா்மநபா்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து பூங்கொடி அளித்த புகாரின்பேரில் அஸ்தம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மற்றொரு சம்பவம்:

சேலம், சாமிநாதபுரம் அா்த்தநாரி தெருவில் கீதா என்பவா் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள் பறித்து சென்றனா். இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த அரைமணி நேரத்தில் ராமகிருஷ்ணா சாலையில் பூங்கொடியிடம் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றது. இதனால், இந்த இரு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படை யில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.