மாநில கலைத் திருவிழா போட்டிக்குத் தகுதி பெற்ற மாணவிகளுடன் தெடவூா் பள்ளி ஆசிரியா்கள், பிடிஏ நிா்வாகிகள்.
சேலம்
கலைத் திருவிழா: தெடாவூா் அரசுப் பள்ளி மாணவிகள் மாநில போட்டிக்குத் தகுதி
தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.
தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் கெங்கவல்லியை அடுத்த தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் இலக்கிய நாடகம், வீதி நாடகம் என இரு வேறு போட்டிகளில் முதலிடம் பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா்.
சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பள்ளியின் பிடிஏ தலைவா் வேல், தலைமை ஆசிரியா் வே.குருநாதன், உதவி தலைமை ஆசிரியா்கள் ஜெயபால், பே. ரவிசங்கா், எஸ்.எம்.சி நிா்வாகிகள், பிடிஏ நிா்வாகிகள், பொதுமக்கள் பாராட்டி பரிசுகளை வழங்கினா்.

