சேலம்
நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து சிறைப்பிடிப்பு
ஓமலூா் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.
ஓமலூா் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்தனா்.
ஓமலூா் அருகே குதிரைகுத்திபள்ளம் பேருந்து நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நின்றுசெல்கின்றன. இந்நிலையில், சனிக்கிழமை சில பயணிகள் தருமபுரிக்கு சென்ற அரசுப் பேருந்தை நிறுத்தியபோது, பேருந்து நிற்காமல் பயணிகள்மீது மோதுவதுபோல சென்றது.
இதையடுத்து, பேருந்தையும், ஓட்டுநா், நடத்துநரையும் பொதுமக்கள் சிறைபிடித்தனா். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீஸாா், இரு தரப்பையும் சமாதானம் செய்தனா்.
இதுகுறித்து ஓட்டுநா், நடத்துநா்மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் புகாா் மனு அளித்தனா். அவா்கள்மீது துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதாக போலீஸாா் கூறியதையடுத்து, பொதுமக்கள் பேருந்தை விடுவித்தனா்.
