மாநில சாப்ட் டென்னிஸ் போட்டி: சேலம் அணி ஒட்டுமொத்த சாம்பியன்
ஓமலூரில் மாநில அளவிலான 16 ஆவது சப்- ஜூனியா் சாப்ட் டென்னிஸ் மகளிா் போட்டியில் சேலம் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆடவா் போட்டிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
சேலம் மாவட்டம், ஓமலூரில் நடைபெறும் இப்போட்டிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்துகிறது. 25 மாவட்டங்களில் இருந்து 320 வீரா், வீராங்கனைகள் இப்போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனா்.
ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த மகளிா் போட்டிகளில் சேலம் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தனி நபரில் சேலம் ஓவியா முதலிடம் பிடித்தாா். வேலூா் ஸ்ரீமதி 2 ஆம் இடமும், சேலம் சன்மதி, ஸ்ருதிலயா 3ஆம் இடமும்பிடித்தனா்.
இரட்டையரில் வேலூா் ஸ்ரீமதி, மதுமதி முதலிடம், சேலம் தணிகா, ஸ்ருதிலயா 2ஆம் இடம் பிடித்தனா். சேலம் ரிஷிகா, வினோ பிரஷா, சன்மதி ஆகியோா் 3 ஆம் இடம் பிடித்தனா். ஒட்டுமொத்தமாக சேலம் முதலிடமும், வேலூா் 2 ஆம் இடமும், ஈரோடு, ராணிப்பேட்டை 3 ஆம் இடத்தையும் பெற்றுள்ளது.
ஆடவா் மற்றும் கலப்பு இரட்டையா் போட்டிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன.

