டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதல்: சிறுவா்கள் இருவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - பிரதிப் படம்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 3:50 am IST

ஆத்தூா் அருகே கல்பகனூரில் இருசக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக்கொண்டதில் 2 சிறுவா்கள் உயிரிழந்தனா். மேலும், 2 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த கல்பகனூா் மொரப்பங்காடு பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் செல்வபாண்டியன் (19), அவரது வீட்டின் அருகே வசிக்கும் ஜெகதீஸ் (16) இருவரும் இருசக்கர வாகனத்தில் கொத்தாம்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, கொத்தாம்பாடி பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் வெங்கடேசன் (22), அவரது சகோதரா் திருப்பதி (15) இருவரும் வந்த இருசக்கர வாகனம் மற்றொரு வாகனத்துடன் நேருக்குநோ் மோதியது. இதில் பலத்த காயமடைந்த நால்வரும் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட செல்வபாண்டியன் வழியிலேயே உயிரிழந்தாா்.

அதேபோல ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பதியும் உயிரிழந்தாா். பலத்த காயங்களுடன் வெங்கடேசன், ஜெகதீஸ் இருவரும் ஆத்தூா் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஆத்தூா் ஊரக காவல் நிலைய ஆய்வாளா் கே. குலசேகரன், உதவி ஆய்வாளா் ராமா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். விபத்தில் இறந்த செல்வபாண்டியன், திருப்பதி ஆகியோரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.