சேலம்
டிப்பா் லாரி மோதி விவசாயி உயிரிழப்பு
சங்ககிரி அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
சங்ககிரியை அடுத்த குஞ்சுபாலிகாடு பகுதியைச் சோ்ந்தவா் புருசோத்தமன் (66), விவசாயி. இவா் வியாழக்கிழமை தனது மின்சார இருசக்கர வாகனத்தில் சங்ககிரியிலிருந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, சங்ககிரி நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த புருசோத்தமன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
