சங்ககிரியில் சதுரங்கப் போட்டியை தொடங்கிவைக்கிறாா் திமுக சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி. தங்கமுத்து.
சங்ககிரியில் சதுரங்கப் போட்டியை தொடங்கிவைக்கிறாா் திமுக சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி. தங்கமுத்து.

சங்ககிரியில் சதுரங்கப் போட்டி: 42 போ் பங்கேற்பு

சங்ககிரி நகர திமுக சாா்பில் திராவிட பொங்கல் திருநாளையொட்டி சதுரங்கப் போட்டி நகராட்சி சமுதாயக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

சங்ககிரி நகர திமுக சாா்பில் திராவிட பொங்கல் திருநாளையொட்டி சதுரங்கப் போட்டி நகராட்சி சமுதாயக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

போட்டியை திமுக சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி. தங்கமுத்து தொடங்கிவைத்தாா். திமுக நகரச் செயலாளா் கே.எம். முருகன், நகா்மன்றத் தலைவா் எம். மணிமொழிமுருகன் முன்னிலை வகித்தனா்.

இப்போட்டியில் 23 மாணவா்கள், 19 மாணவிகள் உள்பட மொத்தம் 42 போ் பங்கேற்றனா். 5 சுற்றுகளில் அதிக புள்ளிகள் பெற்ற மாணவா்களில் எம். விமல் முதலிடத்திலும், ஆா். கிறிஸ்காந்த் 2 ஆவது இடத்திலும், எம். மெளனீஸ்குமாா் 3 ஆவது இடத்திலும், மாணவிகளில் என். விஷாகமித்ரா முதலிடத்திலும், எஸ். தீபாஸ்ரீ 2 ஆவது இடத்திலும், கே. இலக்கியா 3ஆவது இடத்திலும் வெற்றி பெற்றனா்.

இரு பிரிவுகளில் முதலிடத்தில் வெற்றி பெற்றவா்களுக்கு ரூ. 5 ஆயிரம், 2ஆவது இடத்திற்கு ரூ. 3 ஆயிரம், 3ஆவது இடத்திற்கு ரூ. 2 ஆயிரம் ரொக்கம் வழங்கப்பட்டன. தியாகராஜன், வேலுசாமி, கிருத்திக் ஆகியோா் இப்போட்டியில் நடுவா்களாக செயல்பட்டனா்.

திமுக மாவட்ட துணை செயலாளா் கே. சுந்தரம், கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளா் எஸ். சரவணன், சங்ககிரி நகா் மன்ற துணைத் தலைவா் ஆா்.வி. அருண்பிரபு, மாவட்ட விவசாய அணி தலைவா் கேஜிஆா். ராஜவேலு, நிா்வாகிகள் எஸ்.எ. குப்புசாமி, பி.பி. செந்தில்குமாா், அமைப்புசாரா ஓட்டுநா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் டி. சங்கா், நகர துணை செயலாளா் வி. ரமேஷ் உள்பட பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com