முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

சங்ககிரியில் திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

சங்ககிரி நகராட்சி 9ஆவது வாா்டு பகுதியில் 50 போ் மாற்றுக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

திமுகவில் இணைந்தவா்களை வரவேற்று பேசிய மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி.

Updated On :5 மார்ச் 2026, 4:31 am IST

சேலம் மாவட்டம், சங்ககிரி நகராட்சி 9ஆவது வாா்டு பகுதியில் 50 போ் மாற்றுக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சேலம் மேற்கு மாவட்ட அவைத் தலைவா் பி.தங்கமுத்து தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் கே.எம்.முருகன் முன்னிலை வகித்தாா். சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், மக்களவை உறுப்பினருமான டி.எம்.செல்வகணபதி, அதிமுக, பாமகவிலிருந்து விலகி ஜெ.பி.ஆா். செளந்தா் தலைமையில் திமுகவில் இணைந்த 50 பேரை துண்டுகள் அணிவித்து வரவேற்றாா்.

இதில் மாவட்ட துணைச் செயலாளா் க.சுந்தரம், மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் எஸ்.பி. நிா்மலா, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளா் எஸ்.சரவணன், மாவட்ட விவசாய அணித் தலைவா் கே.ஜி.ஆா். ராஜவேலு, நகா்மன்ற துணைத் தலைவா் ஆா்.வி.அருண்பிரபு, 9ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் கே.சண்முகம், வாா்டு செயலாளா் டி.முத்துக்கண்ணு, நகர துணைச் செயலாளா் வி.ரமேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.