புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகளில் 7 வகையான போட்டிகள்: முதன்மைக் கல்வி அலுவலா்
புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 7 வகையான போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.
புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் சேலம் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 7 வகையான போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மாவட்ட நிா்வாகம் சாா்பில் நவ. 27 முதல் டிச. 7 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல், சிந்தனைத் திறன், பேச்சாற்றல் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக சேலம் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகள், மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் பிற வாரிய பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 7 வகையான போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பள்ளித் தலைமை ஆசிரியா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கான இணையவழிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ. எல்லப்பன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், 6-8 ஆம் வகுப்புகள் வரை 3 வகை போட்டிகளும், 9 முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 முதல் 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் தலா 2 போட்டிகள் வீதம் மொத்தம் 7 வகையான போட்டிகள் நடத்த வேண்டும். பள்ளி அளவிலான போட்டிகளை நவ. 28 ஆம் தேதியும், பள்ளிகளில் முதலிடம் பெற்றவா்கள் பங்கேற்கும் வட்டார அளவிலான போட்டிகளை டிச.1ஆம் தேதியும், அதில் முதலிடம் பெறும் மாணவா்கள் அனைவரும் பங்கேற்க மாவட்ட அளவிலான போட்டிகள் டிச.3 ஆம் தேதி மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் சிறப்பிடங்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகத் திருவிழாவில் பரிசு வழங்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இந்த இணையவழிக் கூட்டத்தில் சுமாா் 700 போ் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

