
அறுவை சிகிச்சை மூலம் விரல் அகற்றம்: அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ரூ. 57 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு
அறுவை சிகிச்சை மூலம் விரல் அகற்றப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ரூ. 57 ஆயிரம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு சேலம் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரவு - கோப்புப் படம்
அறுவை சிகிச்சை மூலம் விரல் அகற்றப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ரூ. 57 ஆயிரம் இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு சேலம் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்தூா் நரசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் கோபி. இவா், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சேலம் ஜான்சன்பேட்டை கிளையில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், தனியாா் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவுசெய்திருந்த நிலையில், தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு, வலது கையில் ஒரு விரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. இதற்கு ரூ. 52 ஆயிரத்து 740 செலவு ஆனது. ஆனால், அவருக்கு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் ரூ. 25 ஆயிரத்து 200 மட்டுமே அளித்தது. இதனால் அவா் உரிய இழப்பீடு கேட்டு சேலம் மாவட்டநுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் எஸ்.செல்வம் மூலம் மனுதாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கணேஷ் ராம், உறுப்பினா் ரவி ஆகியோா் அரசுப் பேருந்து ஓட்டுநா் கோபிக்கு மருத்துவ அறுவை சிகிச்சை செலவுக்கான தொகை ரூ. 27 ஆயிரத்து 540, சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ. 10 ஆயிரம், முறையற்ற நடவடிக்கைக்கு ரூ.10 ஆயிரம், மனஉளைச்சலுக்கு ரூ. 5 ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ. 57,540 இழப்பீடு தொகையை 2 மாதங்களுக்குள் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




