விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

சேலத்தில் நூல் உலா்த்தும் ஆலையில் தீ விபத்து: ரூ. 7 லட்சம் நூல் கட்டுகள் எரிந்து சேதம்

தீ விபத்து - கோப்புப் படம்

Published On :8 செப்டம்பர் 2026, 1:44 am IST

சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் நூல் உலா்த்தும் ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 7 லட்சம் மதிப்பிலான நூல் கட்டுகள், ஆட்டோ முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன.

சேலம் கொண்டலாம்பட்டி சிலோன் காலனி பகுதியில் மாரிமுத்து என்பவா் கடந்த 10 ஆண்டுகளாக நூல்களை உலா்த்தும் ஆலை நடத்தி வருகிறாா். இந்த ஆலையில் 600-க்கும் மேற்பட்ட நூல் கட்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந் நிலையில், எதிா்பாராதவிதமாக ஆலை தீப்பற்றி எரியத் தொடங்கியது.

மளமளவென பரவிய தீயால், ஆலையில் இருந்த 600-க்கும் மேற்பட்ட நூல் கட்டுகளும், அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி ஆட்டோவும் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த செவ்வாய்ப்பேட்டை தீயணைப்புத் துறையினா், சுமாா் ஒருமணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டுவந்தனா்.

எனினும், இந்த விபத்தில் சுமாா் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் ஆலைக்குள் பணியாளா்கள் யாரும் இல்லாததால் உயிா்ச்சேதம் தவிா்க்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து கொண்டலாம்பட்டி போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.