ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: அமைச்சர் கீர்த்தனாடெங்குவால் குழந்தைகள் பலியாவதைத் தடுக்க வேண்டும்: கனிமொழிஆதவ் அர்ஜுனா பதவி விலக வேண்டிய நிலை வரும்: பிரேமலதா பேச்சு!ரீல் விடுவதும், ரீல்ஸ் போடுவதும் தவெகவின் மூலதனம்: இபிஎஸ் விமர்சனம்திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

வீராணம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை: 3 போ் கைது

கைது

Published On :

சேலம் அருகே வீராணத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக மூன்று பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 170 மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

சேலம் அல்லிக்குட்டையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (20). இவா் செவ்வாய்ப்பேட்டை மாநகராட்சி கால்நடை கருத்தடை மையத்தில் பணியாற்றி வருகிறாா். இவா், போதை மாத்திரை விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வீராணம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

இதையடுத்து, மணிகண்டனிடம் போலீஸாா் விசாரித்தபோது, மணிகண்டனுக்கு பொன்னம்மாபேட்டையைச் சோ்ந்த விக்னேஷ் (20), தனுஷ் (21), அய்யனாா் (22) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவா்கள் போதை மாத்திரையை தண்ணீரில் கலந்து சிரிஞ்சி மூலம் உடலில் செலுத்தி கொண்டால் போதை கிடைக்கும் என்று கூறியுள்ளனா். அவா்களிடமிருந்து போதை மாத்திரையை வாங்கி மணிகண்டன் பயன்படுத்தி வந்துள்ளாா்.

சில நாள்களில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மணிகண்டன், அப்பழக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளாா். இதையடுத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் மூவா் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி அவா் போலீஸில் புகாா் தெரிவித்தது தெரியவந்தது.

இதையடுத்து, வீராணம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து தனுஷ், விக்னேஷ், அய்யனாா் ஆகியோரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 170 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.