விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மதுரை- மண்டபம் சாலையில் தொடரும் விபத்துகள்

ராமநாதபுரம், நவ. 15:  மதுரை- மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் தொடர்கதையாகி விட்டதால், உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.   இதற்கிடையே விபத்துகளைத் தடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படும் சால

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:21 pm

எஸ்.வி.எஸ்.ஜெக​ஜோதி.

ராமநாதபுரம், நவ. 15:  மதுரை- மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் தொடர்கதையாகி விட்டதால், உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

  இதற்கிடையே விபத்துகளைத் தடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படும் சாலைப் பாதுகாப்புக் கூட்டங்கள், கண் துடைப்புக்காக நடத்தப்படுகின்றனவா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.

  மதுரை-மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதத்தில் மட்டும், இரு விபத்துகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இதுதவிர, பல்வேறு விபத்துகளில் கை, கால்களை இழந்து படுகாயமடைந்தோர் எண்ணிக்கை அதிகம்.

  காசியிலிருந்து ராமேசுவரத்துக்கு பாத யாத்திரையாக வந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பத்ரிபிரசாத் (70), ராமநாதபுரம் அருகே குயவன்குடியில் அரசு பஸ் மோதி உயிரிழந்தார்.

  கடந்த வாரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்தவர்கள் காரில் கேரளத்துக்குச் சென்று மருத்துவச் சிகிச்சை செய்துவிட்டுத் திரும்புகையில், அவர்களது வீட்டருகேயே, சுற்றுலா வேன் மோதி 4 பேர் உயிரிழந்தனர்.

  கடந்த மாதம் சத்திரக்குடி அருகே பொட்டிதட்டியில் அஞ்சலக ஊழியர்கள் 4 பேர் வந்த கார் மீது, மற்றொரு கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இவ்விபத்துகள் மதுரை- மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளன.

  சாலை விபத்துகளால், அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் எப்போதும் கூட்டமாக உள்ளது.

  மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பைவிட தற்போது வாகனங்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்து விட்டது.

  ஆனால் அதற்கு ஏற்றாற்போல, சாலைகளின் தரம் உயர்த்தப்படவில்லை.

  ராமேசுவரம் கோயில் மற்றும் ஏர்வாடி தர்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

  கூடுதல் ரயில்கள் இயக்கப்படாததால், பெரும்பாலானோர் வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் வருகின்றனர்.

  இதனால், சாலைகளில் வாகன நெரிசல் அதிகரித்து விபத்துகள் ஏற்படுகின்றன.

  காசி, புவனேஸ்வர் ஆகிய இரு இடங்களுக்கும் ரயில் விடுவதாக அறிவித்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை ரயில்கள் இயக்கப்படவில்லை.

  ராமநாதபுரம் நகர் போலீஸ் நிலையத்தில் இருந்து, பாரதி நகர் வரை தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் ஆக்கிரமித்துள்ளன.

  இவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.

  பஸ் உள்ளிட்ட வாகனங்களில் ஏர் ஹாரன்களைத் தடை செய்யாததும் விபத்துக்கு ஒரு காரணம்.

  மது அருந்திவிட்டு ஓட்டுநர்கள் பலர் வாகனம் ஓட்டுவதும் விபத்துக்குக் காரணமாகிறது.

  சாலையோர மணல்களை உடனுக்குடன் அகற்றுவதில்லை.

  இதுபோன்ற பல்வேறு காரணங்கள் சாலை விபத்துகளுக்குக் காரணமாகின்றன.

  மாதத்தில் ஒரு நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் சாலைப் பாதுகாப்புக் குழு கூட்டங்களில் பங்கேற்க, சில தொண்டு நிறுவனங்களுக்கு மட்டும் அழைப்பு அனுப்பப்படுகிறது.

  பெரும்பாலான உயர் அதிகாரிகள் இக்கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை.

  சாலைப் பாதுகாப்புக் குழு கூட்டங்களில் அனைத்துத் தரப்பினரும் அழைக்கப்பட வேண்டும்.

  ஓரிடத்தில் விபத்து நிகழ்ந்தால் அந்த இடத்துக்கு ஒரு குழுவை அனுப்பி விபத்துக்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து, வருங்காலத்தில் விபத்து நிகழாதிருக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

  மாவட்டத்தில் கீழப்பெருங்கரை, கீழக்கோட்டை, பொட்டிதட்டி, உத்தரகோசமங்கை விலக்கு சாலை, வழுதூர் விலக்கு சாலை ஆகிய 5 இடங்களில் தொடர்ந்து விபத்துகள் நடக்கின்றன. இதனைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.