மின்சாரப் பிரச்னைக்கு எப்போது தீர்வு?
ராமநாதபுரம், அக். 18: ராமநாதபுரம் மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணி செய்பவர்கள் வயர்மேன், கம்பியாளர், உதவியாளர், மின் பாதை ஆய்வாளர், முகவர், வணிக உதவியாளர் உள்பட இதுபோன்ற களப்பிரிவு பணியில் மட்டும்


ராமநாதபுரம், அக். 18: ராமநாதபுரம் மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணி செய்பவர்கள் வயர்மேன், கம்பியாளர், உதவியாளர், மின் பாதை ஆய்வாளர், முகவர், வணிக உதவியாளர் உள்பட இதுபோன்ற களப்பிரிவு பணியில் மட்டும் மொத்தம் 1051 பேர் பணியாற்றுவதற்குப் பதிலாக 474 பேர் மட்டுமே பணி செய்கின்றனர்.
மின் வாரியத்தில் உடனுக்குடன் மின் இணைப்பு கொடுக்கும் வகையில் போதிய மின் உபகரணங்கள் கையிருப்பில்லை.
பழுதான மீட்டர்களை உடனுக்குடன் மாற்ற முடியாமல் மின் வாரியத்துக்கு அதிக வருவாய் இழப்பும் ஏற்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மொத்தமாக ஒரு நாளைக்கு 34 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. போதிய மின் உற்பத்தி இல்லாததால் தினசரி 2 மணி நேரம் மின் தடை அறிவிக்கப்பட்டு, மின்சாரம் தடை செய்வது வழக்கமாகி விட்டது.
ராமநாதபுரம் அருகே வழுதூரில் ஒரு நாளைக்கு 187 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அரசு இயற்கை எரிவாயு சுழலி மின் நிலையம் இருந்தும் அது ராமநாதபுரத்துக்குப் பயன்படுத்தப்படாமல், தமிழகம் முழுவதும் வழங்கப்படுகிறது.
இப் பற்றாக்குறைகள் குறித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் ஜான் சௌந்தரராஜ் கூறியதாவது:
புதிய மின் இணைப்புக்காக மின் கம்பங்களை நட்டு, விரிவாக்கப் பணி செய்ய ஒவ்வொரு பிரிவிலும் 7 பேர் கொண்ட குழு இருந்தது. இப்போது அக் குழுவை எடுத்து விட்டு காலையில் விரிவாக்கப் பணியும் மாலையில் தடைப்பட்ட மின் இணைப்புகளைச் சரிசெய்யும் பணியையும் மேற்கொள்ளுமாறு கூறியுள்ளனர். பணியாளர்கள் பற்றாக்குறையால் மின்மாற்றிகளைச் சரியாகப் பராமரிப்பு செய்ய முடியாமல் அடிக்கடி பழுதாகி மின்தடை ஏற்படுகிறது.
மனு செய்த 24 மணி நேரத்தில் மின் இணைப்புத் தர வேண்டும் என அரசு சொல்கிறது. ஆனால், அதனைச் செய்ய போதுமான மீட்டர்களோ அல்லது மின் உபகரணங்களோ இல்லை. மீட்டர்களை மொத்தமாக சென்னையில்தான் வாங்குகிறார்கள்.
இவற்றை அந்தந்த மாவட்ட மேற்பார்வைப் பொறியாளர்களே வாங்கிக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டால் மட்டுமே இப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
தனியாரிடம் மின்சாரம் வாங்கினால், அரசுக்கு அதிகம் செலவாகிறது. அரசே ஏன் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடாது எனக் கேள்வி எழுப்பினார் ஜான் செüந்தரராஜ்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் விஜயகுமார் கூறியதாவது:
ஆள்கள் பற்றாக்குறை, மீட்டர்கள் பற்றாக்குறை, மின் உற்பத்தி பற்றாக்குறை ஆகியன இருப்பது உண்மைதான். பணியாள்கள் பற்றாக்குறை குறித்து தலைமைக்குத் தெரிவித்துள்ளோம். பணி மாறுதல் பெற்று ராமநாதபுரம் வருவோரை குறைந்தது 3 வருடங்களாவது பணியாற்ற வேண்டும் என்று சொல்லி வருகிறோம். மின் உபகரணங்கள் தேவைப்படும்போது கேட்டு பெற்றுக் கொள்கிறோம்.
மின் உற்பத்தி நிலையங்களில் கோளாறுகள் ஏற்பட்டாலும் அறிவிக்கப்படாத மின் தடை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...