/

வருசநாடு மலையில் மர்ம நபர்கள் நடமாட்டம்?

தேனி, ஜன. 8:வருஷநாடு மலைப் பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸôர் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

தேனி, ஜன. 8:வருஷநாடு மலைப் பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸôர் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே உள்ள பாலூத்து சேர்மலையாண்டி கோவில் மலை அடிவாரத்தில் உள்ள தனியார் தோட்டக் காவலாளி கண்ணன். தோட்டத்தில் உள்ள குடிசையில் தங்கியிருந்த இவரிடம், வெள்ளிக்கிழமை இரவு 8 பேர் கொண்ட கும்பல் சென்று உணவு இருந்தால் தருமாறு கேட்டதாகவும், அவர்களிடம் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் கண்ணன் புகார் தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸôர் சனிக்கிழமை காலை வருஷநாடு மலைப் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

வனப் பகுதியில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருந்ததாகக் கூறப்படுவதற்கான ஆதாரம் குறித்தும், மர்ம நபர்கள் வன விலங்குகளை வேட்டையாடும் கும்பலைச் சேர்ந்தவர்களா அல்லது நக்ஸல் இயக்கங்களுடன் தொடர்பு உள்ளவர்களா என்பது குறித்தும் விசாரணை செய்து வருவதாக போலீஸôர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.