குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சௌராஷ்டிரா கல்லூரி விளையாட்டு விழா

திருப்பரங்குன்றம், மார்ச் 28:    மதுரை பசுமலை செüராஷ்டிரா கல்லூரியில் 44-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.  கல்லூரியின் செயலர் எஸ்.வி.எஸ். சிவநாத் தலைமை வகித்தார். கல்லூரியின் தலைவர் எஸ்.கே.ஜெகன்ந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:22 am

தினமணி

திருப்பரங்குன்றம், மார்ச் 28:    மதுரை பசுமலை செüராஷ்டிரா கல்லூரியில் 44-வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

 கல்லூரியின் செயலர் எஸ்.வி.எஸ். சிவநாத் தலைமை வகித்தார். கல்லூரியின் தலைவர் எஸ்.கே.ஜெகன்நாதன், பொருளாளர் பி.கே.மோதிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   பேராசிரியர் டி.எஸ். பாலகிருஷ்ணன் வரவேற்றார். விளையாட்டுத் துறைப் பேராசிரியர் எஸ்.ஆர்.வி. ரவீந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரியின் முதல்வர் ஆர்.எல். ராம்நாத் தலைமையுரை ஆற்றினார்.

   விழாவில், ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் தமிழ்நாடு ரஞ்சித் டிராபி கிரிக்கெட் வீரராகிய கே.பி. அருண்கார்த்திக் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில்:

   மாணவர்கள் கடின உழைப்போடு தன்னம்பிக்கையுடன் இலக்கை அடைய முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். இந்த முறை இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என்றார்.

 விழாவில், பல்கலைக்கழக அளவில் தொடர்ந்து செüராஷ்டிரா கல்லூரி 14-வது முறையாக டேபிள் டென்னிஸ் விளையாட்டிலும், 9-வது முறையாக ஹாக்கியிலும் முதல் பரிசுகளை வென்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.  பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

  விழாவில், கல்லூரியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் டி.ஆர். ராஜாராம், ரகுநாத், பாலாஜி, குமரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.