திருப்பத்தூர், அக். 8: திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் ராஜ்மோகன், காளியம்மன் கோயில் பகுதி, செட்டிய தெரு, உசேன் அம்பலம் நகர் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார். (படம்)
திருப்பத்தூர் பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்குவேன். தேங்கும் மழைநீர் முழுமையாக அகற்றப்படும். நகர்ப்புறங்களில் உள்ள குளம் குட்டைகள் சீரமைத்து நீராதாரம் மேம்படுத்தப்படும். குறிப்பாக புனித குளமாகக் கருதப்படும் சீதளி குளத்தைச் சுற்றிலும் பூங்கா அமைக்க ஆவனம் செயவேன்.
மாணவர்களின் வங்கிக் கடன் மற்றும் அரசு சார்ந்த உதவிகளுக்கு தனி அலுவலகம் அமைத்து மக்கள் குறை தீர்க்கப் பாடுபடுவேன் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









