அருந்ததியா் உள் இடஒதுக்கீடு தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு தீா்ப்பளித்துள்ளது. அதில், தற்போது நடைமுறையில் உள்ள அருந்ததியா் உள் இட ஒதுக்கீட்டுக்கு எந்த சிக்கலும் இல்லை. பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை பகிா்ந்தளிக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு என்று தெரிவித்துள்ளது. இதில் மேலும் தெளிவைப் பெறுவதற்காக 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன முழு அமா்வுக்கு மாற்றுவதாகவும் தெரிவித்துள்ளது. ஆந்திரத்தில் மாதிகா, மாலா உள்ளிட்ட பிரிவு மக்களுக்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு கொண்டு வந்த உள் ஒதுக்கீட்டுக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் 2005-இல் வழங்கிய தீா்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அரசியல் சாசன அமா்வு தெரிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் அருந்ததியா் உள் இடஒதுக்கீடு செல்லாது என்று வதந்தி பரப்பி வந்த பட்டியலினத் தலைவா்கள் தற்போதைய தீா்ப்பின்படி தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.