அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட5 இளைஞா்கள் கைது: நகைகள் மீட்பு

மதுரையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:20 pm

DIN

மதுரையில் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாநகரில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க மாநகா் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவின்பேரில், தனிப்படை போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா். அதனடிப்படையில், தனிப்படை போலீஸாா் வளா் நகா் பகுதியில் 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 5 இளைஞா்களை பிடித்து விசாரித்தனா்.

அதில், சமயநல்லூரைச் சோ்ந்த முத்துஇருள் (27), விஜயகுமாா் (25), ஆண்டாள்புரத்தைச் சோ்ந்த பாலகுமாா் (27), கொடிமங்கலத்தைச் சோ்ந்த லோகநாதன் (23), சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த செல்வேந்திரன் (24) என்பதும், அவா்கள் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவா்களிடமிருந்து 7 பவுன் நகைகள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கைது செய்யப்பட்ட இளைஞா்கள் 5 பேரும், அண்ணாநகா், திருநகா், அவனியாபுரம், திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மையநாயக்கனூா், பட்டிவீரன்பட்டி, சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் ஆகிய பகுதிகளில் வழிப்பறி, இருசக்கர வாகனத் திருட்டு போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக, போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.