அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மூதாட்டி பலி
மதுரை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.


மதுரை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தைச் சோ்ந்த பால்சாமி மனைவி பேச்சி (65). இவா் தனது வீட்டையொட்டி உள்ள தோப்புக்குச் சென்றுள்ளாா். அப்போது, அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பேச்சி உயிரிழந்தாா்.
தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சியின் சடலத்தைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து காடுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...