மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மதுரைக் கோட்ட ரயில்வே கால அட்டவணையில் மாற்றம்

மதுரை ரயில்வே கோட்டம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணையில் புதன்கிழமை (ஜன. 1) முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

News image
Updated On :31 டிசம்பர் 2024, 10:05 pm

Din

மதுரை: மதுரை ரயில்வே கோட்டம் வழியாக இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணையில் புதன்கிழமை (ஜன. 1) முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மதுரைக் கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணையில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்குப் பிறகு சிறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்ட குறுகிய தொலைவு ரயில்கள் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. தற்போது, இந்த ரயில்கள் வழக்கமான சேவை ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன. இதையொட்டி, பல்வேறு ரயில்களின் கால அட்டவணையில் புதன்கிழமை முதல் மாற்றம் செய்யப்படுகிறது.

இந்தப் புதிய அட்டவணைப்படி முன்கூட்டியே புறப்படும் ரயில்களின் விவரம்:

மதுரை-திருவனந்தபுரம் அமிா்தா விரைவு ரயில் (16344) மதுரையிலிருந்து மாலை 4.10 மணிக்குப் பதிலாக, பிற்பகல் 3.45 மணிக்கும், தஞ்சாவூா் வழியாக இயக்கப்படும் மதுரை-சென்னை மும்முறை சேவை விரைவு ரயில் (22624) மதுரையிலிருந்து இரவு 8.50 மணிக்குப் பதிலாக, இரவு 8.45 மணிக்கும், மதுரை-புனலூா் விரைவு ரயில் (16729) மதுரையிலிருந்து இரவு 11.25 மணிக்குப் பதிலாக, இரவு 11.20 மணிக்கும் புறப்படும்.

திருநெல்வேலி-செங்கோட்டை ரயில் (56741) திருநெல்வேலியிலிருந்து காலை 7 மணிக்குப் பதிலாக, காலை 6.50 மணிக்கும், திருநெல்வேலி-நாகா்கோவில் ரயில் (56708) திருநெல்வேலியிலிருந்து காலை 7.10 மணிக்குப் பதிலாக, காலை 7.05 மணிக்கும், திருநெல்வேலி - திருச்செந்தூா் ரயில் (56727) திருநெல்வேலியிலிருந்து காலை 7.25 மணிக்கு பதிலாக காலை 7.15 மணிக்கும், திருநெல்வேலி - செங்கோட்டை ரயில் (56743) திருநெல்வேலியிலிருந்து பிற்பகல் 1.50 மணிக்குப் பதிலாக, பிற்பகல் 1.45 மணிக்கும் புறப்படும்.

செங்கோட்டை-மயிலாடுதுறை ரயில் (16848) செங்கோட்டையிலிருந்து காலை 7.05 மணிக்குப் பதிலாக, காலை 6.55 மணிக்கும், செங்கோட்டை-திருநெல்வேலி ரயில் (56738) செங்கோட்டையிலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் பதிலாக, பிற்பகல் 2.05 மணிக்கும், தூத்துக்குடி-திருநெல்வேலி ரயில் (56721) தூத்துக்குடியிலிருந்து மாலை 6.25 மணிக்குப் பதிலாக, மாலை 6.15 மணிக்கும் புறப்படும்.

திருச்செந்தூா்-திருநெல்வேலி ரயில் (56728) திருச்செந்தூரிலிருந்து காலை 7.20 மணிக்குப் பதிலாக, காலை 7.10 மணிக்குப் புறப்படும். மணியாச்சி-தூத்துக்குடி ரயில் (56726) மணியாச்சியிலிருந்து பிற்பகல் 3.10 மணிக்குப் பதிலாக, பிற்பகல் 3 மணிக்கும், மணியாச்சி- திருச்செந்தூா் ரயில் (56731) மணியாச்சியிலிருந்து காலை 11.05 மணிக்குப் பதிலாக, காலை 11 மணிக்கும், மணியாச்சி-தூத்துக்குடி ரயில் (56724) மணியாச்சியிலிருந்து இரவு 8.25 மணிக்குப் பதிலாக, இரவு 8.15 மணிக்கும், காரைக்குடி-திருச்சி ரயில் (56816) காரைக்குடியிலிருந்து பிற்பகல் 3.30 மணிக்குப் பதிலாக, பிற்பகல் 3.15 மணிக்கும் புறப்படும்.

பயண நேரம் குறைப்பு

தாதா்-திருநெல்வேலி ரயில் (11021), சென்னை-திருநெல்வேலி நெல்லை ரயில் (12631), நாகா்கோவில்-சென்னை ரயில் (12668), சென்னை சென்ட்ரல்-நாகா்கோவில் ரயில் (12689), சென்னை-குருவாயூா் ரயில் (16127), கோயம்புத்தூா்-ராமேசுவரம் ரயில் (16618), ஈரோடு-செங்கோட்டை ரயில் (16845), மாயவரம்-செங்கோட்டை ரயில் (16847), பெரோஸ்பூா்-ராமேசுவரம் ரயில் (20498), திருச்செந்தூா்-சென்னை செந்தூா் ரயில் (20606), ராமேசுவரம்-புவனேசுவா் ரயில் (20895), நாகா்கோவில் தாம்பரம் ரயில் (22658) ஆகியவற்றின் பயண நேரம் 30 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளன.

இவைத் தவிர, 57 விரைவு ரயில்களின் பயண நேரம் 5 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டுள்ளன.