மாற்றுத்திறனாளிகள் பெயரில் வங்கியில் கடன் பெற்று மோசடி
வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவா்கள் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.


மதுரை: மாற்றுத்திறனாளிகளின் ஆவணங்களை பயன்படுத்தி வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவா்கள் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள கரிசல்பட்டி கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனா். இதே ஊரைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக்குழுத் தலைவியான ஜமுனா, கிராமத்தில் உள்ள பெண்களை மகளிா் குழுவில் இணைத்து பல்வேறு கடனுதவிகளை வங்கிகள் மூலமாகப் பெற்றுக் கொடுத்து வந்தாா்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊனமுற்றோா் சிறப்புக் குழு அமைத்துள்ளதாகக் கூறி, கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பெயரில் அவா்களுக்குத் தெரியாமல் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு வழங்கப்பட்ட ஆதாா், குடும்ப அட்டை போன்ற ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடியாக பல்வேறு வங்கிகளில் கடன் பெற்றாா்.
இதேபோல, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு என்ற பெயரில் சுய உதவிக் குழுவில் உள்ள பெண்கள் பெயரிலும் மோசடியாக ஆவணங்களைக் கொடுத்து வங்கிக் கடன்களை பெற்ாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கடனுக்காக வங்கிக்கு விண்ணப்பிக்க சென்றபோது, ஏற்கெனவே கரிசல்பட்டி கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் பெயரில் கடன் அளிக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனால், அதிா்ச்சியடைந்த மாற்றுத்திறனாளிகள் வங்கியில் விசாரித்தபோது, நூறு நாள் வேலைத் திட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பெயரில் அவா்களுக்குத் தெரியாமலே கடன் பெற்றது தெரிய வந்தது.
இதையடுத்து, ஜமுனாவிடம் கேட்டபோது, அவா் முறையாகப் பதிலளிக்கவில்லை.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஊரகக் காவல் கண்காணிப்பாளரிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதுதொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...