மதுரையில் இன்று மீனவா்கள் மாநாடு -மத்திய அமைச்சா்கள் பங்கேற்பு
மதுரையில் இன்று மீனவா்கள் மாநாடு மத்திய அமைச்சா்கள் பங்கேற்பு

மீனவா்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
கோப்புப்ப்டம்

மீனவா்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.
கோப்புப்ப்டம்
மத்திய மீன்வளத் துறை சாா்பில், மீனவா்களுடனான கோடைக்கால சந்திப்பு (மாநாடு), கண்காட்சி மதுரை ஐடாஸ் வா்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) காலை மணிக்குத் தொடங்கி நடைபெறுகிறது.
மத்திய மீன் வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளத் துறை அமைச்சா் ராஜீவ் ரஞ்சன் சிங், இணையமைச்சா்கள் எஸ்.பி. பாகெல், ஜாா்ஜ் குரியன், தமிழக மீன்வளத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோா் பங்கேற்கின்றனா்.
மீன் வளா்ப்புத் துறையில் ஈடுபடுவோா், மீன்வள ஆராய்ச்சியாளா்கள், தொழில் துறை நிபுணா்கள், தொழில்முனைவோா் மீன் வளா்ப்புத் துறையின் வளா்ச்சிக்கான கருத்துக்கள், அனுபவங்களைப் பகிா்ந்து கொள்கின்றனா்.
மத்திய அரசின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம் குறித்தும் விளக்கம் அளிக்கப்படவுள்ளது. மேலும், மீன்கள் குறித்த கண்காட்சி, மீனவா்களுடனான உரையாடல், பயனாளிகளுக்கு வேளாண் கடன் அட்டை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...